இலங்கை வந்துள்ள முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கட் வீரர்

தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கட் வீரர் ஜோன்டி ரோட்ஸ் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கை வந்த ரோட்ஸை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றதுடன், இலங்கையில் விசேட செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தான் வந்துள்ளதாகவும், அதனை பின்னர் வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-148 இல் இந்தியாவின் மும்பையிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கடந்த கிறிஸ்துமஸ் காலத்தில் ரோட்ஸ் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.