ஆலய அலங்கார வளைவு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

பண்டாரவளை – கிரெய்க்வத்த மேல் பிரிவு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரெய்க்வத்த மேல் பிரிவு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் உயிரிழந்த நபர், புணரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்த போது அலங்கார வளைவு இடிந்து விழுந்து இடம்பெற்ற விபத்தில் குறித்த நபர் உயிர் இழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் தியத்தலாவை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்