70 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்களுடன் பெண் கைது
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இன்று திங்கட்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – ஹோகந்தரவில் வசிக்கும் 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 47,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 235 சிகரெட் அட்டைப்பெட்டிகள் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.