தென்கொரிய ஜனாதிபதி கைது

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அந்த நாட்டு புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

6 மணிநேர முயற்சிக்கு பின்னர் அவரது வீட்டில் வைத்து யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அவர் ஊழல் விசாரணை அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு முன்னதாகவே விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணையை அவர் புறக்கணித்திருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, யூன் சுக் யோல் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டாரா? என்பதனை தீர்மானிக்கும் வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், அவர் மன்றில் முன்னிலையாகாதமையால் வழக்கு விசாரணை 4 நிமிடங்களில் நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.