![](https://minnal24.com/wp-content/uploads/2025/01/ஆழிப்பேரலையின்-ஆறாத-வடுக்கள்-ஏற்பட்டு-20-வருடங்கள்-2025-01-02T134653.567.png)
கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் பளை – தம்பகாமம் பகுதியில் இன்றையதினம் வியாழக்கிழமை பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சொரம்பட்டு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும், தம்பகாமம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவருமே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 23 கிலோ 165 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர்கள் சான்றுப்பொருட்களுடன் பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.