டென்னிஸ் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் ரஃபாயல் நடால்!

டேவிஸ் கிண்ணத் தொடருடன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற்றுள்ளார்.

டேவிஸ் கிண்ணத் தொடருடன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், டேவிஸ் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான காலிறுதி போட்டியில் ஸ்பெயின் தோல்வி கண்டது.

இதில் ஒற்றையர் பிரிவில் தமது இறுதி போட்டியில்ரஃபாயல் நடாலும் தோல்வியைத் தழுவினார்.

இதையடுத்து ரஃபாயல் நடால் டென்னிஸ் போட்டிகளிலிருந்து விடைபெற்றார்.

போட்டி முடிந்ததும் இரசிகர்கள் அனைவரும் சேர்ந்து “ரஃபா… ரஃபா.. ரஃபா…” என்று கூச்சலிட்டனர்.

இதனால், ரஃபாயல் நடால் கண்ணீர் விட்டு அழுது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.

கடந்த 20 ஆண்டுகள் சர்வதேச டென்னிஸில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ரஃபாயல் நடால் 63 டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

38 வயதான ரஃபாயல் நடால் 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் வெற்றியையும் சேர்த்து மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.