கருஞ்சிவப்பாக மாறும் தெகிவளை கால்வாய்கள்
தெகிவளை மவுண்ட்லவேனியா பகுதிகளில் உள்ள கால்வாய்களில் இனந்தெரியாத சிவப்பு சாயம் கலந்துள்ளமை குறித்து தெகிவளையின் பொதுசுகாதார பரிசோதகர் தெகிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
தெகிவளை மவுண்டலவேனியாவிலிருந்து அத்திடியவில் உள்ள பறவைகள் சரணாலயத்தை நோக்கி செல்லும் கால்வாய்களிலேயே இவ்வாறு நவம்பர் ஐந்தாம் திகதி முதல் சிவப்பு சாயம் கலந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதேவேளை தெகிவளையில் உள்ள வீடொன்றினுள் இயங்கும் சிறிய தொழிற்சாலையிலிருந்தே இந்த சாயம் வெளியேறியுள்ளதை கண்டுபிடித்துள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.