தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு

28,987

தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு சபை அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய காலை 6 மணி முதல் 7 மணி மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என மாசு கட்டுப்பாட்டு சபை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், குறைந்த அளவில் ஒலி மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு சபை அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Sureshkumar
Srinath