மன்னாரில் தமிழரசு கட்சி சார்பாக களம் இறங்குகிறார் இளம் சட்டத்தரணி

-மன்னார் நிருபர்-

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக வன்னி தேர்தல் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் இளம் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன்.

வவுனியாவில் உத்தியோகபூர்வமாக வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ள சட்டத்தரணி டினேசன்வேட்பு மனு தாக்கல் செய்ததன் பின்னர் மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.

சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் முன்னதாகவே மன்னார் மாவட்டத்தில் சதோச மனித புதைகுழி வழக்கு,காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பான வழக்குகள்,மாவீரர் தின நிகழ்வுகளுக்கான அனுமதி மறுக்கப்பட்ட சமயங்களில் இலவசமாக சட்ட உதவிகள் வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.