ஊசி மருந்து குப்பிகள் கொள்வனவினால் 97 மில்லியன் ரூபாய் நட்டம்
கடந்த வருடம் மருத்துவ விநியோகப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஊசி மருந்து குப்பிகள் கொள்வனவினூடாக, அரசாங்கத்துக்கு 97 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்தநிலையில், லெக்டியுலோஸ் மில்லிமீற்றர் 120 என்ற குறித்த மருந்தைக் கொள்வனவு செய்யும்போது இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் லக்மினி கிரிஹாகம தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்து குப்பிகளைக் கொள்வனவு செய்தபோது, மருத்துவ விநியோக பிரிவின் பணிப்பாளராக இருந்த கபில விக்ரமநாயக்கவின் நிர்வாகத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.