ஜனாதிபதி தேர்தலுக்காக மூடப்படவுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகங்களை எதிர்வரும் 20ஆம் திகதி வழமையான கடமைகளுக்காக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக குறித்த அலுவலகம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தேர்தல் நடவடிக்கைகளை சுமூகமாக நடத்துவதற்கு வசதியாக எதிர்வரும் 20ஆம் திகதி வழமையான பணிகள் மேற்கொள்ளப்படாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.