மட்டு. சத்துருக்கொண்டான் படுகொலை 34 ஆவது நினைவஞ்சலி

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 186 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட 34ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் நேற்று திங்கட்கிழமை ஈகைசுடர் ஏற்றி செலுத்தப்பட்டது

குறித்த 34ஆவது நினைவஞ்சலி பிரதேச பொதுமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

உறவுகளை பறிகொடுத்தவர்களின் உறவினர்கள் அரசியல்வாதிகள் கிறிஸ்தவ பாதிரியார்கள் பொது அமைப்புக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நினைவு தூபியில் விளக்கேற்றி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது நினைவுப்பேருரை ஆற்றிய யோசப்மேரி அடிகளார் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் நாங்கள் ஒரு முடிவை எடுக்க முடியாது. சர்வதேசம் தான் முடிவொன்றை பெற்று தரவேண்டும். இந்த வேளையில் எம் கையில் பொது வேட்பாளர் என்கிற சக்தி இருக்கிறது. அவர் ஜனாதிபதியா வருவதற்கு களம் இறங்கவில்லை மாறாக எமது தமிழ் இனத்தின் வலியை சொல்வதற்கு ஒன்றாக நாங்கள் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவே களம் இறங்கியுள்ளார்.

எனவே பொது வேட்பாளருக்கு எமது வாக்குகளை வழங்கி எமது மக்களின் நிலையை இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.