மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற இளம்தாய்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த ஹரிகரன் கிருஸ்னவேணி (வயது 25) என்ற பெண்ணே இவ்வாறு ஒரு பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி 1 ஆண் குழந்தை மற்றும் 3 பெண் குழந்தைகள் என நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.

4 குழந்தைகளும் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்