பச்சை திராட்சை பயன்கள்

பச்சை திராட்சை பயன்கள்

பச்சை திராட்சை பயன்கள்

✅மனிதர்களுக்கு இயற்கை வழங்கிய அற்புத கொடை பழங்கள் ஆகும். உணவு கிடைக்காத அல்லது உணவு உண்ண முடியாத காலங்களிலும் பழங்களை உணவாக கொள்வதால் மிகுந்த நன்மைகள் ஏற்படுத்தும் பழங்களில் அனைவராலும் விரும்பி உண்ண படக்கூடியது திராட்சைபழம் ஆகும்.  இதை பழங்களின் ராணி என்றும் அழைப்பர்.

✅திராட்சையில் மூன்று வகைகள் உள்ளன. அதில் கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் என நிறங்களின் அடிப்படையில் மூன்று வகையான திராட்சைகள் உள்ளன. அதில் பச்சை நிற திராட்சை அதிகமாக புளிப்பு இல்லாமல்இ தித்திக்கும் என்பதால் பலரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த திராட்சைகள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வாரி வழங்குகின்றன. அப்படி என்ன நன்மைகளை இவை நமக்கு அளிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

பச்சை திராட்சையின் பயன்கள்

🍇பொதுவாக பச்சை திராட்சை ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுதலை தரும். ஏனென்றால் திராட்சை நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுக்கும். அதனால் நீங்கள் தினமும் சிறிதளவு பச்சை திராட்சை சாப்பிடுவது உங்களின் சுவாச மண்டல பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுதலை பெற செய்யும்.

🍇திராட்சையில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம் உடலில் ஏற்படும் கிருமிகளிலிருந்து எதிர்த்து போராட உதவுகிறது. ஆதலால் திராட்சையை தினமும் சாப்பிடுவது நல்லது.

🍇சிலருக்கு தினமும் காலை கடன்களை கழிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகிறது. திராட்சையில் நார்ச்சத்துகள் அதிகம் கொண்டது. மேலும் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை போக்கும் நீர்ச்சத்தும் அதிகம் நிறைந்தது. எனவே மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் தினமும் சிறிது பச்சை திராட்சை பழங்களை சாப்பிடுவது சிறந்த பலனை தரும்.

🍇நாம் வாழ்வது வெப்ப மண்டல பகுதி என்பதால் நமக்கு சிறுநீரக கல் உருவாகும் சாத்தியம் அதிகம். ஆனால், திராட்சைப் பழங்களை தினமும் சாப்பிட்டு வருவதால் சிறுநீரக கல் உருவாகுவது தடுக்கப்படும்.

🍇இன்றைய நவீன உலகில் எல்லாருக்கும் கொலஸ்ட்ரால் வருகிறது. அதை சரி செய்ய பச்சை திராட்சை பழம் வழி செய்கிறது. அது எப்படியென்றால் திராட்சையில் உள்ள Pterostilbene என்னும் உட்பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவுகிறது.

🍇முதுமைகாலம் வரை கண்பார்வை தெளிவாக இருப்பதற்கு சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியமாகும். கண்களின் கருவிழிகளின் செல்வளர்ச்சி தன்மையை திராட்சைபழம் அதிகரிக்கும் சக்தி கொண்டதால் கண்பார்வை தெளிவாகும். மேலும் கண்புரை, கண்ணழுத்த நோய்களையும் போக்குகிறது.

🍇பொதுவாக திராட்சையில்  நீர்ச்சத்து உள்ளது. அதனால் தினமும் 4 திராட்சையின் சாற்றை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.

🍇பச்சை திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனை வராமல் இருக்க உதவுகிறது .

🍇திராட்சையில் காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்ற சத்துக்கள் உள்ளது. அதனால் திராட்சையை சாப்பிடுவதனால் எலும்புகள் வலிமை பெறும்.

பச்சை திராட்சை பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்