
பட்டிருப்பு கல்வி சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னால் நடைபெற்றது.
பட்டிருப்பு முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு ஆதரவாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பட்டிருப்பு கல்வி வலயத்தின் முன்னாள் பணிப்பாளர் சிறீதரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து அவர் பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
எனினும் சிறீதரனை வெளியேற்றியமையை கண்டித்து பட்டிருப்பு கல்வி வலயத்தில் தொடர்ந்தும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மீண்டும் அவர் வேண்டும் எனும் தொனிப்பொருளில் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
