
-வவுனியா நிருபர்-
முல்லைத்தீவில் இருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு மாடுகளை ஏற்றிச் சென்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை மற்றும் நேற்று முந்தினம் ஞாயிற்று கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் நீண்டகாலமாக மாடுகளை ஏற்றிச் செல்வதாகவும், பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டு செல்லும் போர்வையில் பக்க வீதிகளை பயன்படுத்தி மாடுகளை ஏற்றிச் செல்வதாகவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு லொறிகளில் இருந்த பசுக்களில் பெரும்பாலானவை கருவுற்ற பசுக்கள் என்றும், சில மாடுகள் நோய்வாய்ப்பட்ட விலங்குகள் என்றும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கஹட்டகஸ்திகிலிய, இகிரிகொல்லாவ மற்றும் வெலிசறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இதேவேளை சந்தேக நபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
