
மாவட்ட மட்ட மாற்றுதிறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.முரளிதரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.சுதர்சினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
