100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

நைஜீரியாவில் சுலேஜா என்ற இடத்தில் கனமழையால் சேதமடைந்த சிறைச்சாலையிலிருந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் வியாழக்கிழமை பெய்த கனமழையால் சிறைச்சாலை சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருந்த வேலி உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன.

இதனை பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் சிறையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தப்பிச் சென்ற கைதிகளை தேடும் பணியில் சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்