
இஸ்ரேல் தாக்குதல்: பலியான கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உயிருடன் குழந்தை
இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை உயிருடன் எடுத்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் காசாவின் ரபா நகரில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.இதில் 22 பேர் உயிரிழந்ததுடன் பலியானவர்களில் கர்ப்பிணி ஒருவர் அவரது கணவர் மற்றும் மூன்று வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர்.
உயிரிழந்த கர்ப்பிணியான சப்ரீன் அல் சகானி 30 வார கால கர்ப்ணியாக இருந்துள்ளார்.அவரது வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.
இதையடுத்து 1.4 கிலோ எடையுள்ள பெண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருவதாகவும் குழந்தையின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
