மட்டக்களப்பு – பொத்துவிலுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டுவருகின்ற தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்தனர் மீது குறித்த பகுதியைச் சேர்ந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை தன்மீது மேற்கொண்டுதாக பேருந்து சாரதி தெரிவித்தார்.
கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
பொத்துவில் அரச பேருந்து தரிப்பிடத்தில் இருந்து குறித்த பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பிற்கு புறப்படுகின்ற நேரத்திற்கு முன்னர் பஸ்ஸை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் , மட்டக்களப்பில் தங்களுக்கு அவசர வேலை இருப்பதாக வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியரும் சிலரும் வற்புறுத்தியுள்ளர்.
இந்தநிலையில் பஸ்ஸை குறித்த நேரத்திற்கு முன்னர் எடுக்க முடியாது என பஸ் சாரதியும், நடத்துனரும் தெரிவித்த நிலையில் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அவர்கள் பஸ்ஸில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இறக்கி விடப்பட்டவர்கள் சென்று அவர்களுடைய நண்பர்கள் உறவினர்களை தொலைபேசியில் அழைத்து பஸ் வண்டியினுடைய சாரதியையும் ,நடத்துனரையும் காண்டுமிராண்டித் தனமாக தாக்குவதை காணொளி மூலமாக காணக்கூடியதாக உள்ளது.
இதேவேளை அரசுக்கு (CTB)க்கு சொந்தமான குறித்த இடத்தில் இருக்கின்ற அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
ஆனால் இதுவரையிலே இரண்டு நாட்களாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகவோ அல்லது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராகவோ இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என, பாதிக்கப்பட்ட தரப்பினரும் , இப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கடுமையான தாக்குதலுக்கு உள்ளான சாரதி தெரிவிக்கையில்….
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
