
‘திடமான அவள்’ எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற்றது
இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் குறித்த மாநாடு இடம்பெற்றது.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், இணைப்பாளர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

