இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று

மக்களவைத் தேர்தல் எனப்படும் இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை காலை 7 மணியளவில் ஆரம்பமாகி மாலை 6 மணிவரை நடைபெறும் என அந்த நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

7 கட்டங்களாக நடைபெற உள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், இன்று முதற்கட்டமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.

முதற்கட்ட வாக்குப்பதிவுகளுக்காக 16.63 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களுக்காக 187,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 68,321 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 8,050 வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்