
ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்
ஈரானில் உள்ள ஒரு தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்பு செயற்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான ஐ.ஆர்.என்.ஏ தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குப் பிறகு இஸ்பஹான் நகருக்கு அருகே மூன்று சிறிய அறியப்படாத பறக்கும் பொருள்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன என அரசு தொலைக்காட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
எறிகணைத் தாக்குதல் காரணமாக உடனடியாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஈரானில் உள்ள அணுசக்தி நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
