அரிசியின் விலையை குறைக்குமாறு மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்மாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பினால் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரிசியின் விலையை 100 ரூபா வரை குறைக்குமாறு கோரி பதாகைகளை ஏந்தியவாறு பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.