போதைப்பொருளுக்கு அடிமையான இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நுரைச்சோலை மற்றும் கெசல்வத்தை பொலிஸ் நிலையங்களில் பணிபுரியும் இரண்டு கான்ஸ்டபிள்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் கெசல்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளை சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்திய போதே அவர் ஐஸ் மற்றும் கஞ்சாவிற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
.இதேவேளை நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீடொன்றின் அறையொன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகின்றது.
