தீயினால் 10 ஏக்கர் காணி எரிந்து நாசம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ட்ரத்தடன் தோட்டத்துக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த பகுதியில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீயானது வனப்பகுதிக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு பரவியதையடுத்துஇ ருவன்புர பகுதியில் வசிக்கும் மக்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த நிலப்பரப்பிற்கு யாரவது தீ வைத்திருக்கலாம் என ஹட்டன் ருவன்புர பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்