18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பதிவு எண் பெறுவது கட்டாயம்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பதிவு எண்ணைப் பெற வேண்டும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஏ. எம் நபீர் தெரிவித்துள்ளார்

வரி செலுத்த வருமானம் இருந்தால் மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டும் என்றும், அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை எண் இருப்பது போல் இறைவரித் திணைக்களப் பதிவு எண்ணை  வழங்குவதே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள தேசிய அடையாள அட்டை எண்ணுடன்,  இந்த எண்ணும் கட்டாயமாகும்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

‘ஜனவரி 2024 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு வருவாய்த் துறையின் பதிவு எண்ணை (TIN NUMBER) பெற வேண்டும். இதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். பதிவு எண் பெறுவது மற்றும் வரி ஆவணங்களை திறப்பது இரண்டு விஷயங்கள். அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை எண் உள்ளது.

மேலும்,  உள்நாட்டு வருவாய் திணைக்களத்தில் பதிவு எண் இருக்க வேண்டும். வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் இருந்தால் மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டும். பின்னர் அவர்கள் வருமான வரி செலுத்த கோப்பை திறக்க வேண்டும்.’  என தெரிவித்தார்.