இரத்தினபுரி – கெஹலோவிதிகம – வம்பத்துஹேன பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது 2 வயது மகனைக் கொன்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது
குழந்தையுடன் வசித்து வந்த 22 வயதுடைய தாய் வீட்டுக்கு முன்னால் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
பின்னர், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் குழந்தையும் வீட்டில் உள்ள கட்டிலில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அந்த பெண்ணின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் வசித்து வந்துள்ளார்.
ஆனால், கடந்த 5 நாட்களுக்கு முன்பு அவர்களையும் அந்த நபர் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனையை இரத்தினபுரி பதில் நீதவான் கித்சிறி புட்டேவத்த மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனை இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.