யாழ். சித்தங்கேணி இளைஞன் மரணம் தொடர்பாக அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளதுடன், பொலிஸ் பொறுப்பதிகாரியின் சாட்சியங்களும் பதிவு செய்யப்படவுள்ளன.
இதற்காக இளைஞனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் மன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
அதனை தொடர்ந்து அடையாள அணிவகுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்படுpக்னறது.
குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
இதன்போது நவம்பர் மாதம் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொறுப்பதிகாரியான பொலிஸ் உத்தியோகஸ்தரிடமும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட , யாழ்ப்பாணம் சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
