
கோழி இறைச்சிக்குள் மர்மப்பொருள்
கோழி இறைச்சிக்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதியை பார்க்கச்சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொணபொல, படுவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூன்று கைதிகளை உணவுப்பொதிகளுடன் பார்வையிட களுத்துறை சிறைச்சாலைக்கு சென்ற நிலையில், பொலிஸார் உணவுப் பொதிகளை சோதனையிட்ட போது கோழி இறைச்சிக்குள் ஐஸ் போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளதையடுத்து இவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
