நீர் குளிக்கமாட்டீரா? யாசகரை பெற்றோல் ஊற்றி கொளுத்தியவர் கைது

ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த யாசகர் மீது பெற்றோலை ஊற்றி, கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

64 வயதான தர்மதாஸ என்பவரே உயிரிழந்துள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் 27 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

யாசகர் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் “நீ குளிக்கமாட்டீர் இல்லையா? குளிக்காவிட்டால் தீ வைப்பேன்” என பலமுறை அந்த சந்தேநபர் கூறியுள்ளார். அதேபோல, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பெற்றோலை ஊற்றி கொளுத்தியுள்ளார். இதை கண்ட அங்கிருந்தவர்கள், யாசகரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலன் இன்றி இன்று திங்கட்கிழமை காலை மரணமடைந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்