
மாலியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இலங்கை படையினர் நால்வர் காயம்
மேற்கு ஆபிரிக்காவின் மாலியில் வெடிகுண்டு சாதனம் ஒன்று வெடித்ததில், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கும் இலங்கை படையினர் நால்வர் காயமடைந்ததாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த படையினரின் முகாமுக்கு வடமேற்கே இடம்பெற்றுள்ளது.
அவர்களுக்கு பாரிய காயங்கள் ஏற்படாத நிலையில், மருத்துவ சிகிச்சைப் பெற்று வருவதாக பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.
கவச வாகனம் ஒன்றில், ஆயுத வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு அளித்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் குண்டுத் தாக்குதலின்போது 14 படையினர் கொல்லப்பட்ட இடத்திலேயே கடந்த திங்கட்கிழமை சம்பவமும் இடம்பெற்றுள்ளது.