அழகு சாதன நிலையங்களை குறிவைத்து சூட்சமமாக களவாடும் அழகி

 

அழகுக் கலை நிலையங்களுக்கு வரும் யுவதிகளை இலக்கு வைத்து அவர்களின் பணம் மற்றும் பணப்பரிமாற்று அட்டை உட்பட உடமைகளை திருடிவரும் யுவதி ஒருவரை கம்பளை பொலிஸார் உட்பட நாவலப்பிட்டிய பொரலஸ்கமுவ பொலிஸாரும் தேடி வருகின்றனர்.

குறித்த யுவதி சில தினங்களுக்கு முன்னர் கம்பளை பிரதேச அழகு சாதன நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த பெண் ஒருவரின் பணப் பரிமாற்று அட்டையினை திருடியமை தொடர்பாக கம்பளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு மேலும் மேற்குறிப்பிட்ட ஏனைய பொலிஸ் நிலையங்களிலும் குறித்த யுவதிக்கெதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

இதன் போது கம்பளையில் திருடப்பட்ட கடன் அட்டையினை பயன் படுத்தி 80 ஆயிரம் ரூபாவிற்கு சூகையடக்க தொலைபேசி ஒன்றினை கொள்வனவு செய்துள்ளதோடு நகைக் கடை ஒன்றுக்குச் சென்று தங்க மாலை ஒன்றினையும் கொள்வனவு செய்ய முற்பட்டுள்ளமை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளது.

மேற்குறிப்பிட்ட சம்பவத்தினையடுத்து சந்தேக நபரான யுவதியின் முகப் புத்தகத்தினை ஆராய்ந்த போதே குறித்த யுவதி கம்பளை உட்பட மேலும் பல பிரதேசங்களிலும் அழகு சாதன நிலையங்களை குறிவைத்து திருடியமை தெரிய வந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்