988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 988 கைதிகளுக்கு அவர்களின் குற்றத்தின் தன்மை மற்றும் நன்னடத்தையின் அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்