575 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்-

காரைநகர் கடலில் வைத்து 575 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது, மாதகலை சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கடற்படையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க