53 பேருக்கும் பிணை

சோமாவதி தேசிய பூங்காவுக்குள் நுழைந்து விறகு வெட்டியக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 53 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா ஒருவருக்கு 53 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் 53 பேரையும் பிணையில் விடுதலை செய்வதற்கு கந்தளாய் பதில் நீதவான் ஷானிக பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

7 டிராக்டர்களில் 16 முதல் 60 வயதிற்குட்பட்ட 53 பேர் குறித்த வனப் பகுதிக்குள் நுழைந்து மரம் வெட்டியக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.