
50 அடி பள்ளத்தில் இருந்து விழுந்து முச்சக்கரவண்டி விபத்து
-பதுளை நிருபர்-
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராத்கராவ பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர்
படுகாயம் அடைந்த மூவரும் பொரளாந்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இவர்கள் கொழும்பில் இருந்து பொரலந்த பகுதியில் அமைந்துள்ள தமது வீட்டுக்கு திரும்பும் போதே இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
