42 வெளிநாட்டு மதுபான போத்தல்கள்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 42 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 25 கிலோ ஏலக்காய்களுடன் வெளிநாட்டிலிருந்து வந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க