40,000 மெட்றிக் தொன் அரிசி இன்று இறக்குமதி செய்யப்படும்

இன்று 40,000 மெட்றிக் தொன் அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் ஒரு தொகுதியே இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியை ச.தொ.ச மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சு, நாட்டரிசியை 110 ரூபாய்க்கும் சம்பா அரிசியை 130 ரூபாய்க்கும் சதொச மூலம் விற்பனை செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் ஹந்ரானி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.