40 நாட்கள் தாமதமாக வலசை வந்துள்ள பிளமிங்கோ பறவைகள்

-மன்னார் நிருபர்-

தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளது. கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின் வருகை குறைந்து வருவதாக பறவைகள் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோதண்ட ராமர் கோயில் கடற்கரைப்பகுதி அருகே அமைந்துள்ள கடல் நீர் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிக்கு ஐரோப்பிய கண்டத்தில் இருந்து பிளமிங்கோ பறவைகள் வருடந் தோறும் டிசம்பர் மாதம் இறுதி முதல் ஜனவரி மாத இறுதிவரை உணவு தேடி வந்து செல்லும் .

இங்குள்ள சதுப்பு நிலப்பகுதியில் வாழும் கடல் வாழ் உயிரினங்களை உணவாக கொண்டு வாழ்ந்து வரும் பெப்ரவரி தொடக்கத்தில் தமிழகத்தில் உள்ள சரணலாயங்களுக்கு செல்லும். ஆனால் இந்த ஆண்டு 40 நாட்கள் கால தாமதமாக பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளது.

இது குறித்து பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் இந்த ஆண்டு 40 நாட்களுக்குப் பிறகு தனுஷ்கோடி பகுதிக்கு பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளது. தொடக்கத்தில் 400 பறவைகள் வந்த நிலையில் தற்போது 4 ஆயிரத்திற்கும் உட்பட்ட பறவைகள் குஜராத் மாநிலத்தில் இருந்து தனுஷ்கோடி பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளது.

ஆண்டுதோறும் ஒரு வார காலம் இங்கு குறித்த பறவைகள் வருவதற்கான முக்கிய காரணம் உணவுக்காக மட்டும்மே.எனினும் இந்த ஆண்டு கால தாமதமாக வந்ததற்கு நீர் மாசுபாடு மற்றும் ராமேஸ்வர பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கடலில் கலப்பதால் தண்ணீரின் பி .எச் .அளவு குறைந்து பறவைகள் உண்ணக்கூடிய பாசி வகைகள் உற்பத்தி ஆகாததால் வலசை வரும் பிளமிங்கோ பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை  விட இந்த ஆண்டு குறைந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்