3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு CID உத்தரவு

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 (1) விதியின் கீழ் கேகாலை மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பொலிஸாருக்கு ஆதரவளிக்க இலங்கை இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. மேலும், ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை நாரணபத்தவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.