2வது நாளாக தபால் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு!

-மூதூர் நிருபர்-

தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியிலுள்ள தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியாள அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இன்று அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக தோப்பூர் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெற வருகை வந்தோர் சேவை பெறாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க