26 விகாரைகளை அமைப்பதற்கான திட்டத்தை சஜித் பிரேமதாசவே முன்மொழிந்துள்ளார் – ஸ்ரீகாந்தா
திருகோணமலை – குச்சவெளி பகுதியில் சுமார் 26 விகாரைகளை அமைப்பதற்கான திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவே முன்மொழிந்துள்ளார் என மூத்த சட்டத்தரணியான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பொதுகட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து இன்று திங்கட்கிழமை மாலை யாழ். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழ் மக்களுக்காக சஜித் பிரேமதாச ஒருபோதும் குரல் எழுப்பியதில்லை”. ஆனால், ஒரு மந்திரியாக அவர், 1000 விகாரைகள் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.
தமிழ் மண்ணில் 2009ஆம் ஆண்டுக்கு பிறகு நூற்றுக்கணக்கான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. குச்சவெளியில், 26 விகாரைகளுக்காக சுமார் 3887 ஏக்கர் நிலம், அதாவது ஒரு விகாரைக்கு கிட்டத்தட்ட 150 ஏக்கர் என்ற வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை, இவ்வாறான ஒரு கருத்தை விதைத்தது சஜித் பிரேமதாச ஆகும்” என குற்றம் சுமத்தியுள்ளார்.