232 பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்

நிர்ணயிக்கப்பட்ட நிகர எடை காட்சிப்படுத்தப்படாத 232 பேக்கரிகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வியாழக்கிழமை வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த பேக்கரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.