
2026-இல் நாடு திவாலாகும் என்ற அச்சத்தை முறியடித்த ஜனாதிபதி
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க முன்வைக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீட்டினால், 2026 ஏப்ரல் மாதத்திற்குள் நாடு மீண்டும் திவாலாகும் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
அரசாங்கம் மிகவும் வலுவான நிதி ஒழுக்கத்தையும் தெளிவான இலக்குகளையும் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலத் தரவுகளைச் சுட்டிக்காட்டினார்.
கடந்த கால மிகைப்பற்று (Overdraft): நீண்ட காலமாக திறைசேரி கணக்கு மறை பெறுமானத்திலேயே காணப்பட்டது.
2018-இல் 180 பில்லியன் ரூபாய்.
2019-இல் 244 பில்லியன் ரூபாய்.
2020-இல் 575 பில்லியன் ரூபாய்.
2021-இல் இது 821 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது.
தமது அரசாங்கத்தின் கீழ், 2025 நவம்பர் மாத இறுதியில் திறைசேரி கணக்கானது 1,202 பில்லியன் ரூபாய் நேர் பெறுமானத்தைக் காட்டியுள்ளது.
இது ஏறத்தாழ 2 டிரில்லியன் ரூபாய் அளவிலான முன்னேற்றமாகும்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இன்றி, இவ்வளவு பெரிய தொகையை (500 பில்லியன் ரூபா) மேலதிக மதிப்பீடாகச் சமர்ப்பிக்க முடிந்தது இந்த வலுவான நிதி நிலையினாலேயே என்று ஜனாதிபதி விளக்கமளித்தார்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த மதிப்பீட்டிற்கு, பொது நிதி பற்றிய குழு (CoPF) நேற்று ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சபையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு பாதுகாப்புப் பணிகள் காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன.
