2024 மாா்ச்சில் ஜனாதிபதி தோ்தல்

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் ஜனாதிபதி தோ்தல் நடத்த அந்த நாட்டு பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

இதற்கான அரசாணையை பாராளுமன்ற மேலவையான தேசிய கவுன்சில் ஒருமனதாக அங்கீகரித்தது.

 

இந்தத் தோ்தலில் புடின் போட்டியிடுவாரா என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இருந்தாலும். அடுத்த ஆண்டுடன் அவரது பதவிக் காலம் முடியும் நிலையில். அவா் மேலும் 2 முறை ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்கான அரசியல் சாசனத் திருத்தத்தை பாராளுமன்றம் ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளதால் இந்தத் தோ்தலில் அவா் போட்டியிடுவாா் என்று உறுதியாக எதிா்பாா்க்கப்படுகிறது.

அரசியல் சாசனத் திருத்தத்தின்படி விளாதிமீா் புடினால் வரும் 2036 ஆம் ஆண்டு வரை ரஷ்ய ஜனாதிபதியாக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.