2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி சென்னையில் நாளை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் நாளைய முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மதீஷ பத்திரன விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

உபாதையில் இருந்து மதீஷ பத்திரன இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால், அவர் நாளைய போட்டியில் இடம்பெறமாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .