பணி இடமாற்றம்: மனவிரக்தியால் அபிவிருத்தி உத்தியோகத்தரின் தவறான முடிவு
-யாழ் நிருபர்-
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது – 49) என்ற திருமணமாகாதவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்தது. ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.