
16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது
களுத்துறை பிரதேசத்தில் 16 மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறிய தனியார் வகுப்பு கணித ஆசிரியர் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு குறித்த சந்தேக நபர் வாக்கு மூலம் வழங்குவதற்காக வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிறுமிகளை வன்கொடுமை செய்யும் போது எடுக்கப்பட்ட 16 வீடியோ பதிவுகள் அவரது மடிக்கணனியிலிருந்து பெறப்பட்டதையடுத்து, அவர்களை அவதானித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் களுத்துறை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
