125 மில்லியன் ரூபா உதவி வழங்கும் இத்தாலி

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாவை வழங்க இத்தாலி அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது